சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவரிடம், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வர் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் முழு கவனம் செலுத்தி வருகிறார்.சுற்றுச்சூழல் துறை என்ற பெயரை மாற்றி சுற்றுச்சூழல் காலநிலை மற்றம் என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டு செல்கிறார்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மண்ணை மணல் ஆகும் என்ற எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தாமல் தமிழகத்தை பாதுகாக்கும் ஒரு முதல்வர் கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கும்போது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.