Connect with us

பட்ஜெட் 2022: ஈராண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மீளுமா? சேண்ட் பாக்ஸ் திட்டம் அமல்படுத்தப்படுமா?

tourist

செய்திகள்

பட்ஜெட் 2022: ஈராண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மீளுமா? சேண்ட் பாக்ஸ் திட்டம் அமல்படுத்தப்படுமா?

பட்ஜெட் 2022: ஈராண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மீளுமா? சேண்ட் பாக்ஸ் திட்டம் அமல்படுத்தப்படுமா?

நம் இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள அனைத்து துறையிடமிருந்து கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்து வருவார்கள்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பொருளாதார நெருக்கடியில் காணப்படுகின்ற சுற்றுலாத்துறையும் கோரிக்கைகளை வைத்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை மந்தமான சூழ்நிலையில் உள்ளது.

கொரோனா அச்சத்தால் பல சுற்றுலாப் பகுதிகள் கட்டுப்பாடுகளுடன் காணப்படுகிறது. இதனால் சர்வதேச பயணிகள் வருகையும் குறைந்துவிட்டது. இதனை ஈடுகட்டும் விதமாக நடக்க இருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு சுற்றுலா துறை ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பிய நிலையில் சர்வதேச பயணிகள் சுற்றுலாத்துறை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனை மீட்டெடுக்க தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் சேண்ட் பாக்ஸ் திட்டம் இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டும் என்று ixigo நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அலோக் பாஜ்பாய் கோரிக்கை வைத்துள்ளார்.

 சேண்ட் பாக்ஸ் திட்டம்:

வெளிநாட்டு பயணிகள் உள்ளே வரும் போது தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும் போதும். அவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதாகும். இது போன்ற திட்டம் இந்தியாவிலும் இருந்தால் வெளிநாட்டு பயணிகள் மூலமாக சுற்றுலா மேம்பாடு என்று கூறப்படுகிறது.

சுற்றுலாத்துறைக்கு உதவியாக இருக்கும் விமான பயணிகளில் வரி சலுகைகள் தேவை என்றும் சுற்றுலா துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top