ஆட்டத்தை ஆரம்பித்து விட்ட கொரோனா! பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா?

தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் அதிக அளவில் கொரோனா பரவல் காணப்படுகிறது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்படலாம் என்று அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி சி நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிப்பதால் பள்ளிகள் மூடப்படுவது மற்றும் தேர்வுகள் நிறுத்தப்படுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்காது என்று கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி சி நாகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியில் மட்டும் 107 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த பள்ளி மூடப்படுமா? என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார் அமைச்சர் நாகேஷ்.

அதோடு மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்களை செய்தால் மட்டுமே போதுமானது என்றும் அமைச்சர் கூறினார். இதனால் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment