புதன்கிழமையோடு முடிவுக்கு வருகிறது ஊரடங்கு! 13ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம்; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழக அரசின் பெருமுயற்சியால் இன்று தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பதவி ஏற்கும்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு

இந்த ஊரடங்கானது தமிழகத்தில் பல நாட்களாகவே இருந்து வருகிறது. இது குறித்த டிசம்பர் 13ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து டிசம்பர் 13ஆம் தேதியில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய்த் துறை, உயர் அலுவலர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 15ஆம் தேதி புதன்கிழமையோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment