முதல்வர் பதவியில் இருந்து 26ஆம் தேதி விலகுகிறாரா? பெரும் பரபரப்பு

8506274d1a65e425437568a84aa2e755

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா வரும் 26-ம் தேதி பதவி விலக இருப்பதாகவும் மேலிடத்து உத்தரவு காரணமாக அவர் விலக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கட்ந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இல்லை என்பதால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. ஆனால் இந்த ஆட்சி ஒரு சில மாதங்களிலேயே கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

1218c3375e2a60392e6c8c1233dc7a96

இதனை அடுத்து 2019ஆம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றது. எடியூரப்பா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த அவர் நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எடியூரப்பாவுக்கும், பாஜக மேலிடத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் எடியூரப்பா வரும் 26ம் தேதி பதவி விலகப் போவதாகவும் வயது மூப்பு காரணமாக அவர் பதவி விலகப் போவதாக அவரது தரப்பினர் கூறினாலும், பாஜக மேலிட உத்தரவுப்படி அவர் பதவி விலக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment