Connect with us

பேருந்து கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கையை அடுத்து போக்குவரத்து அமைச்சரின் பதில்

Tamil Nadu

பேருந்து கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கையை அடுத்து போக்குவரத்து அமைச்சரின் பதில்

7bc035c96dd67ffd8eb3bc134e34c8de-1-2

பேருந்து கட்டணங்கள் கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்றும் பேருந்துகள் ஒரு கிலோமீட்டர் ஓடினாலே அரசுக்கு ரூபாய் 50 நஷ்டம் ஆகிறது என்றும் சமீபத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்திருந்தார். 

அந்த வகையில் விரைவில் பேருந்து கட்டணங்கள் உயர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை தற்போது நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் இருப்பினும் மக்கள் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் பேருந்து நிலையங்களில் மீண்டும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டு விடும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top