Connect with us

எம்மாடிவோ..! தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு இத்தனை கோடி வருவாயா ? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

பாஜக

செய்திகள்

எம்மாடிவோ..! தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு இத்தனை கோடி வருவாயா ? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

எம்மாடிவோ..! தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு இத்தனை கோடி வருவாயா ? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்ற  அமைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் படி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2019-2020 ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளுக்கு ரூபாய் 920 கோடியை கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கினர். இதில் பாஜகாவிற்கு மட்டும் ரூ. 720 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.

இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஏர்டலின் சார்பு நிறுவனமாக புரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளை சார்பாக பாஜகவிற்கு ரூ. 216 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்கு அடுத்ததாக ஐ.டி.சி என்ற நிறுவனம் பாஜகாவிற்கு ரூ. 55 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனிடையே 2019-2020 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 3,355 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜக கட்சினருக்கு மட்டும் ரூ.2,555 கோடி கிடைத்துள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு கார்ப்ரேட் நிறுவனங்கள் பாஜகவிற்கு நிதி வழங்குவது பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக அளிக்கும் நன்கொடை மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் நன்கொடையில் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தேசிய கட்சிகளை விட பாஜக கட்சிக்கு மட்டும்  அதிக அளவில் நிதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top