Connect with us

என்ன சொல்றீங்க..! பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காதா ?

03 1396506694 biryani1 600

தமிழகம்

என்ன சொல்றீங்க..! பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காதா ?

என்ன சொல்றீங்க..! பிரியாணி சாப்பிட்டால் குழந்தை பிறக்காதா ?

தமிழகத்தில் பிரியாணி என்ற உணவு மிகவும் பிரபலமானது. அதிலும் குறிப்பாக  சிக்கன், மட்டன் போன்ற  அசைவ பிரியாணிகளுக்கு ஒரு ரசிகர்  பட்டாளமே உண்டு.

இந்த நிலையில் பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் காட்டு தீயாய் பரவி வருகிறது. இதனால் பிரியாணி பிரியர்கள் சாப்பிடலாமா ? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதில் பதில் அளிக்கும் விதமாக பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மை குறைவு, குழந்தையின்மை ஏற்படுவதாக இதுவரையில் எந்த ஆய்வும் நிரூபிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் நாம் அன்றாட வாழ்கையில் சாப்பிடுகின்ற அரிசி விட பிரியாணி அரிசி சற்று மாறுதலாக இருக்கும். இதனால் சேர்க்கப்படும் மூலக்கூறு பொருட்கள் உடலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறுகின்றனர்.

மேலும், வழக்கதை விட அதிகமாக உடல் எடை அதிகரிப்பதால் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இதனை பிரியாணி மேல் திணிக்க கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top