Connect with us

அதிமுக பொதுக்குழு நடக்குமா?- 9 மணிக்கு தெரியும்! காரணம் ஓபிஎஸ் வழக்கு;

admk meeting

தமிழகம்

அதிமுக பொதுக்குழு நடக்குமா?- 9 மணிக்கு தெரியும்! காரணம் ஓபிஎஸ் வழக்கு;

இன்றைய தினம் அதிமுகவில் வரலாற்று சிறப்புமிக்க நாளாக காணப்படுகிறது. ஏனென்றால் இன்று அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் மீண்டும் கூட உள்ளது.

ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அதிருப்தியுடன் கூட்டத்தில் பாதியிலிருந்து வெளியேறினார். அதன்பின்பு அவர் வழக்கும் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று தான் தீர்ப்பாகிறது என்பதால் பொதுக்கூட்டம் கூட்டம் சந்தேகத்தில் தான் காணப்படுகிறது. ஏனென்றால் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

இன்று காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கிறார். ஏற்கனவே நேற்று இரவு கோயம்பேடு பூந்தமல்லி அருகே காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top