
பொழுதுபோக்கு
மீண்டும் ரஜினியுடன் கூட்டணியா?- கார்த்திக் சுப்புராஜ் ஓப்பன் டாக் !!
ரஜினிகாந்தை மீண்டும் இயக்கினால் மிக்க மகிழ்சியென கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் 170 படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியான நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இது நடைபெற ஆசைப்படுவதாக கூறினார்.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் வேறு ஒருத்தர்காக படம் இயக்குவதாகவும் தற்போது சூப்பர் ஸ்டாருக்காக எழுதவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார். அதோடு இது குறித்த தகவலை விரைவில் கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆர்.சி 15 சங்கர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு கதை எழுதியது தனக்கு கிடைத்த மரியாதை என தெரிவித்துள்ளார். அதோடு தான் ரஜினியின் ரசிகர் என்றும் எதார்த்தமாக ரஜினியை சந்தித்ததாகவும் கூறினார்.
மேலும், ஷங்கர் இயக்கிய ஆர்சி 15 படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
