Connect with us

நேற்று தர்மபுரி-இன்று மதுரை; சக்ஸஸ் ஆகுமா ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள்?

madurai

செய்திகள்

நேற்று தர்மபுரி-இன்று மதுரை; சக்ஸஸ் ஆகுமா ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள்?

நேற்று தர்மபுரி-இன்று மதுரை; சக்ஸஸ் ஆகுமா ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள்?

நேற்றைய தினம் முழுவதும்  ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டே பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நவீன அரங்கம் உருவாக்கப்படும் என்று பேசியுள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நவீன அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையமும் நவீன அரங்கத்தில் இடம் பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூபாய் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரை ஆக மாற்றியது திமுக அரசுதான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

ரூபாய் 25 கோடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரை சிறை வெளியே புறநகரில் மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரையில் சிறைச்சாலை உள்ள பகுதி மக்கள் பயன்படுத்தப்படும் பசுமை இடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top