Entertainment
ஷாக்ஷி சென்ற வேலையினை செய்து முடிப்பாரா?
விஜய் தொலைக்காட்சியில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக் களமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா, சாக்ஷி இருவரும் கவின் பெண்களை ஏமாற்றுவது குறித்துப் பேசினர். ஷாக்சியுடன் நடந்துகொண்டதைப் போலவே அவர் இப்போது லாஸ்லியாவிடம் நடந்துகொள்கிறார் என்று வனிதா கூறினார்.

ஷாக்சியும் அதனை ஆமோதித்து, நான் ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன் அல்லவா? அது நட்பு இல்லை காதல்தான் என்று, ஆனால் யாரும் நான் சொன்னதை நம்பவில்லை என்பதுபோலக் கூறினார்.
கவின் லாஸ்லியா மீது கொண்டிருப்பது நட்புதான் என பலமுறை கூறினார், நிச்சயம் இதுகுறித்த குறும்படம் இந்தவாரம் வெளியாகும் என்று தெரிகிறது.
ஷாக்சியும் , கவினும் சோபாவில் அமர்ந்தபடி, தங்களுடைய காதலைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பர், நிச்சயம் கவினுக்கு இந்தவாரம் ஆப்பு உண்டு என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள்.
ஷாக்சி உள்ளே அனுப்பப்பட்டதும் அதற்காகத் தான் என்று தெரிகிறது, ஆனால் ஷாக்சி ஷெரின்- வனிதா பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல் வந்தவேலையினை மட்டும் செய்தால் மட்டுமே கவின் முகத்தை அம்பலப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தியும் உள்ளனர்.
