Connect with us

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கபடுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Tamil Nadu

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கபடுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

b658acb920140bb5a741ed8c33f5081b

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை/ இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த வாரம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியானபோது செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார். எனவே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top