Connect with us

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு!

News

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு!

74b5d96b5a4526a45b388a6f7a7ccefd

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுநர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top