பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

b658acb920140bb5a741ed8c33f5081b

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் பள்ளிகளும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ள நிலையில் புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் அதன் அடிப்படையில் முதல்வர் சொல்லும் வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்

அதேபோல் கல்லூரிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்களின் அறிக்கை வந்த பிறகு கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வரும் ஆகஸ்ட் 1முதல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

ஏற்கனவே பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது என்பதும் ஆசிரியர் சங்கமும் இது குறித்த கோரிக்கையை அரசு விடுத்துள்ளது என்பதால் விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment