பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

b421492acfa132d737b6283f1ce9a674

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்கிறார் 

எய்ம்ஸ் இயக்குனர் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் பள்ளிகளை திறந்தால் மீண்டும் கொரொனா வைரஸ் மாணவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்

இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின்னர் முதல்வரிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment