உலகிற்கே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் மெல்லமெல்ல பரவிக் கொண்டே வருகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் பரவல் சற்று அதிகரிக்க தொடங்கி விட்டது.
இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்திலும் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 1.5 ஆண்டுகளுக்குப் பின்பு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தான் பள்ளிகள் திறக்கப் பட்டது.
பள்ளிகள் திறந்தது முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் இருந்ததால் விடுமுறைகள் அதிகரிக்கவே தொடங்கியது. இதன் மத்தியில் தென்னாப்பிரிக்காவில் தோன்றி தற்போது உலகத்தை சுற்றி வரும் ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதோடு பெற்றோர் தரப்பில் இருந்தும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி, அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பின் மூலம் பாடங்கள் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.