Connect with us

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா? மழுப்பலாக பதிலளித்த முன்னாள் அமைச்சர்!

சசிகலா

Tamil Nadu

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா? மழுப்பலாக பதிலளித்த முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா? மழுப்பலாக பதிலளித்த முன்னாள் அமைச்சர்!

தற்போது அதிமுகவில் சசிகலா இணைப்பு குரல் அதிகரித்துள்ளது. இதனால் 2 நாட்கள் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சசிகலா வந்திருந்த போது அவரைக் காண்பதற்காக பன்னீர் செல்வத்தின் சகோதரர் நேரில் சென்று சந்திப்பு நிகழ்த்தினார். இதனால் தற்போது அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சசிகலா சேர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் இடம் கேள்வி கேட்டதற்கு அவர் மழுப்பலாக பதில் தந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று அதிமுகவினரே குரல் எழுப்பி வருகின்றனர் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில் அளிக்க முடியாமல் திணறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவார் என்று அதிமுகவின் சுற்று வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top