இந்தியாவிலேயே பெரும் பிரச்சனையாக காணப்படுவது மொழி திணிப்பு தான். அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பு பற்றி தமிழகத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து கொண்டு வருபவர்கள்.
அவர்களில் மிகவும் முக்கியமானவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தான். இந்த நிலையில் அவர் மருத்துவ படிப்பு படிக்க சமஸ்கிருதம் தேவை என்ற நிலைமை வருமோ? என்று கேள்வி கேட்டுள்ளார்.
மருத்துவர்கள் ஹிப்போகிரட்டிக் பெயரால் எடுக்கும் உறுதிமொழி சமஸ்கிருத நூலில் ஷராக் ஷாபாத் பெயரில் மாற்றமா? என்று கேள்வி கேட்டுள்ளார். சமஸ்கிருதத்தில் காணப்படும் ஒருவர் பெயரால் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் செய்துள்ளது.
மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை என்ற நிலையும் நாளை வருமோ? என்று கி.வீரமணி கேள்வி கேட்டுள்ளார். மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற பழைய நிலையைக் கூட கொண்டு வந்தாலும் வருவார்கள் என்று வீரமணி கூறினார்.
ஒற்றைக் கலாச்சாரத்தை பன்மொழி, பன்முக, பண்பாட்டை அழித்து ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை புகுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டை சமஸ்கிருத மயமாக்க வகையில் மற்றொரு திணிப்பை புகுந்த தேசிய மருத்துவ கவுன்சில் மாற்ற முயற்சி செய்து வருகிறது.