சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் பத்துதல என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பத்துதல படத்தை முடித்துவிட்டு அவர் முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக முதன் முதலில் சமந்தா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் அதிகாரபூர்வமாக முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் இந்த தகவலை வரும் ஏப்ரல் மாதம் தான் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது