ஒரு வழியா 3 1/2 மணி நேரம் பேச்சுவார்த்தை முடிவு..! உக்ரைன் கோரிக்கையை ஏற்குமா ரஷ்யா?
இன்று இந்திய நேரப்படி சுமார் 2.30 மணிக்கு பெலாரஸ் நாட்டில் ரஷ்ய,உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் வேகம் குறைந்து காணப்பட்டது.
அதோடு மட்டுமில்லாமல் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஊரடங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி உக்ரைன்-ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இருநாட்டு பிரதிநிதிகளும் சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவிய படைகளை வாபஸ் பெற வேண்டும் என உக்ரைன் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளனர். முழுமையாக படைகள் இரசியா விலக்க வேண்டும் என உக்ரேன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மட்டுமின்றி கிரீமியாவில் இருந்தும் ரஷ்ய படைகள் விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இதனால் ரஷ்யா, உக்ரேன் வலியுறுத்தி உள்ளதை ஏற்குமா? என்பது பல நாடுகளுக்கு எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
