மக்களே உஷார்!! தென்மாவட்டங்களுக்கு மழைக்கு பெய்யும்.. வானிலை மையம் தகவல்..
கேரளா கடல்பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தளவில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலையில் பனிமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.
