மக்களே உஷார்!! இன்று தமிழகத்தில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று குமரி, நெல்லை மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்த வரையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் பனி மூட்டத்துடம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு இன்று இரவு புயலாக மாறுவதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
