அக்.2-வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை!! ஆன்லைன் ரம்மி-க்கு தடை விதிக்கப்படுமா?

தமிழகத்தில் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை கூட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த சபாநாயகர் அப்பாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அன்றைய தினத்தில் சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.