Connect with us

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை!! – மம்தா திட்டவட்டம்;;

மம்தா பானர்ஜி

செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க போவதில்லை!! – மம்தா திட்டவட்டம்;;

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்காமல் விலகி இருக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்க போவதில்லை என அறிவித்துள்ளது.

குறிப்பாக மார்க்ரெட் ஆல்வாவின் பெயரை ஆலோசிக்காமல் அறிவித்துள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜெகதீஸ் சங்கருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர்.

இதனால் எதிர்க்கட்சிகள்  இடையே ஏற்பட்ட ஒற்றுமையில் மீண்டும் பிளவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 45-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு என்பது உள்ளது.

தற்போது குடியரசுத் துணைத்தலைவர் வாக்கெடுப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் மார்க்ரெட் ஆல்வாவிற்கு குறைந்த வாக்கு என்பது கிடைக்கும் என தெரிகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top