
செய்திகள்
பதவி விலகப்போவதிலை! – கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்..
கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வன்முறையாக வெடித்துள்ளது. குறிப்பாக போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கினர்.
இதன் காரணமாக அச்சத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியதாக கூறப்படுகிறது. குறிப்பாக இலங்கை அதிபர் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் தப்பி ஓடியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில் தனது அதிபர் பதவியை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதே நேரம் இலங்கை பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க இன்று தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தங்கல் நாட்டில் அடைக்கலம் காணவில்லை என்றும், கோத்தபய தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வந்துள்ளதாகவும், அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று அறிக்கையின் வாயிலாக விளக்கம் வந்துள்ளது.
