அடுத்தடுத்து இன்னும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. நேற்றையதினம் நம் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதனை தமிழக அரசும் இன்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இவ்வாறு உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி மாநில அரசு ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து வகை உணவகங்களிலும் 50% வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து வகையான மதுபான கடைகளையும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றிலும் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஆட்சியர் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை குறித்து இதுவரை முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் கூறியுள்ளார்.
ஜனவரி 12ம் தேதியில் தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவி வரும் நிலையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மோடியின் வருகை இருக்குமோ? இருக்காதோ? என்ற கேள்வியோடு அங்குள்ள மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.