Connect with us

3 ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படுமா?

News

3 ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படுமா?

0ed1ab9e62d10da7b18b6d1c447ff5e9

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பாக மதுரை மாநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ளது. மேலும் இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சாரம் பற்றியும் மிகவும் காரசாரமாக இருந்தது. ஏனென்றால் திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது எய்ம்ஸ்  செங்கலை எடுத்து விட்டதாக கூறி மிகவும் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை சில கேள்விகளை எழுப்பியுள்ளது.3c49afe1d8ac4a07aa06d933be592184

அந்தப்படி தமிழகத்தில் 3 ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் ஒவ்வொன்றுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top