நாளை நடைபெறும் ஜே.ஈ.ஈ தேர்வுத்தேதிகள் ஒத்திவைப்பா? மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

066750d52da21ca43b78ff3f34e4f993

மகாராஷ்டிரா மாநிலத்தில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதும் இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜே.ஈ.ஈ தேர்வில் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர், பால்கர், ராய்காத், ரத்தினகிரி, சிந்துதுர்க், சாங்லி சதாரா ஆகிய பகுதி மாணவர்களுக்கு ஜே.ஈ.ஈ மெயின் தேர்வில் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

ஜூலை 25 மற்றும் 27 தேதிகளில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக மாற்ற தேதியில் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மெயின் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த அறிவிப்பு மகாராஷ்டிர மாநில மாணவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரத்தில் மிக கனமழை பெய்து வருவதையடுத்து ஜே.ஈ.ஈ  தேர்வை எப்படி எழுத போகிறோம் என்று அச்சத்தில் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment