Connect with us

அடுத்து வரும் கொரோனா அலையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF 1

Tamil Nadu

அடுத்து வரும் கொரோனா அலையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அடுத்து வரும் கொரோனா அலையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸின் பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

இதனிடையே  தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள், சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அலை எழுட்சி அடைந்துள்ளதால் எதிர்காலத்தில் வரும் கொரோனாவில் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் வரும் காலங்களில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் சஞ்சய் ராய் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பெரும் தொற்றினை எதிர்கொள்ள முக்கிய வளத்தினை தந்திருப்பதாக கூறியுள்ளார்.

நீண்டகால பாதுகாப்பினை அளிக்கும் வகையில் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு திறனை இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். எனவே கட்டாய முககவசம் அணிவதை தவிர்க்க பரீசிலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top