முன்னணி இசையமைப்பாளராகியதிரையுலகில் ,தனுஷ்யின் 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித் என உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்,விஜய்யின் பீஸ்ட்,கமலின் விக்ரம் படங்களுக்கு இசையமைத்து,அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் அனிருத்துக்கு படத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது,தற்போழுது முன்னணி இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஹீரோக்களாக கலக்கிவரும் சூழலில் அனிருத்திற்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
மருமகன் -னு கூட பார்க்காமல் தனுஷை வசமா சிக்க வைத்த ரஜினி!!!!
ஆனால் அப்போழுது அனிருத்தினால் படத்தில் நடிக்கமுடியவில்லையாம். அதற்கு காரணம் விஜய்யின் கத்தி படவேலைகளும் இருந்ததால் அனிருத்தால் படத்தில் நடிக்கமுடியாமல் போனது,அப்படி அனிருத் இழந்த படம் எது தெரியுமா??
2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நானும் ரவுடி தான் திரைப்படம் தான். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அனிருத்தை அணுகியுள்ளார் விக்னேஷ் சிவன்.
அனிருத்துக்கு இக்கதை மிகவும் பிடித்திருந்ததாம் ஆனால் முதல்முதலாக அதுவும் ஹீரோவாக நடிப்பதற்கு சற்று தயக்கம் இருந்ததாம். தற்போழுது நல்ல இசையமைப்பாளராக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.