சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தாருக்கு கூடுதலாக 4 வார்டுகள் வேண்டும்!-மனு தள்ளுபடி

தமிழக மக்களால் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் என்றாலே அதிக அளவு ஆண் வேட்பாளர்களே களம் இறங்குவர். ஆனால் நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முழுவதும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

ஏனென்றால் பெருவாரியான மாநகராட்சிகள் நகராட்சிகள் அனைத்து வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி வார்டுகள் பெண்கள் மட்டுமின்றி பட்டியலின பெண்களுக்கும் தனியாக வார்டுகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் பட்டியல் இனத்தவருக்கு கூடுதல் வார்டுகள் வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு கூடுதலாக நான்கு வார்டுகளை ஒதுக்க கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

வார்டு மறுவரையில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இட ஒதுக்கீடு கொள்கையின்படி கூடுதல் வார்டுகளை ஒதுக்க கோரி அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கம் வழக்கு தொடுத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment