Connect with us

“ஊழியர்கள் உட்கார நாற்காலிகள் கட்டாயம் !!” பின்பற்றுவார்களா உரிமையாளர்கள்?

News

“ஊழியர்கள் உட்கார நாற்காலிகள் கட்டாயம் !!” பின்பற்றுவார்களா உரிமையாளர்கள்?

f61c22fae1ca859ebb0e33f9cb356273

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கடைகள் அதிகமாக காணப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் போன்றவைகள் அதிகமாக காணப்படுகிறது. இது நம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக காணப்படும்.  இந்த நிலையில்  வர்த்தக மற்றும் ஜவுளி கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் உட்கார்ந்து வேலை பார்க்கும் படி நேற்றைய தினம் சட்டப்பேரவையில் கூறப்பட்டிருந்தது.902411e10a849c3e9ca76ff1778022ac

அதன்படி கடை உரிமையாளர்கள் பின்பற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  மேலும் ஊழியர்கள் உட்கார நாற்காலிகள் கட்டாயம் என்று கூறப்பட்டது. மேலும் கடைகள் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நிற்க வைக்கப்படுவதால் பல வகையான உடல் கேடுகளுக்கு ஆளாகின்றனர் என்று அரசு கூறியுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என்றும் கூறியுள்ளது. இருக்கை வசதியை வழங்குவது குறித்து தொழிலாளர் ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கடைகள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுவதற்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top