Connect with us

ஒற்றை தலைமை பற்றி மட்டுமே விவாதமா? ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள்?

ஓபிஎஸ் ஈபிஎஸ்

தமிழகம்

ஒற்றை தலைமை பற்றி மட்டுமே விவாதமா? ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள்?

இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொண்டர்கள் படைபலம் சூழ்ந்தது போல் காணப்படுகின்றனர்.

மேலும் அவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் வரிசையாக முன்னாள் அமைச்சர்கள் ஒரு ஒவ்வொருவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகின்றனர்.

மேலும் அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நுழைவு வாசலுக்கு வந்து விட்டதாகவும் தெரிகிறது. அவர் இன்னும் சற்று நேரத்தில் மேடைக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழு கூட்டத்தில் வெறும் ஒற்றை தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வாகும் வரை தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் இன்று நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

உயர் நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் ஒரே தலைவர் குறித்து மட்டுமே விவாதம் நடைபெறும் என்றும் தகவல் கிடைத்துள்ளன.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் காணப்படுகிறது..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top