Connect with us

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பா?

Tamil Nadu

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பா?

b421492acfa132d737b6283f1ce9a674

தமிழக தேர்தல் தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் மட்டுமின்றி நிபா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்

இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top