மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுமா?
தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு தொடங்கிய முதல் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சில நாட்கள் முன்பு அறிவித்திருந்தது.
இதனால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில் மகாராஷ்டிராவிலும் நாளை முதல் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இதேபோல் டெல்லியிலும் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் முழுவதுமாக பெறப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தமிழகத்தில் முக கவசம் அணிவது, சமூகஇடைவெளிகளை கடை பிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து நடைபெற இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
