Connect with us

நீடிக்கும் போர் பதற்றம்: இந்தியாவில் உயருமா சமையல் எண்ணெய் விலை?

202106161848232623 Tamil News Over past month prices of edible oils are reducing SECVPF

செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்: இந்தியாவில் உயருமா சமையல் எண்ணெய் விலை?

நீடிக்கும் போர் பதற்றம்: இந்தியாவில் உயருமா சமையல் எண்ணெய் விலை?

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்தால் இந்தியாவில் பல குடும்பங்கள் மறைமுகமாக பாதிக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் ரஷ்யா போர்பதற்றம் இன்னும் குறைந்த பாடில்லை. ஒரு வேலை இரு நாடுகளிக்கிடைபே போர்வந்தால் அதன் தாக்கம் இந்தியாவில் சமையல் அறைவரை எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கு காரணம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சூரிய காந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்துதான் இந்தியா அதிகளவு இறக்குமதி செய்கிறது. கடந்த 2021-ல் மட்டும் சுமார் 19 லட்சம் டன் சூரிய காந்தி எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் இதில் 74% உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து 12% சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளிலும் போர் மூண்டால் சமையல் எண்ணெய் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

சமையல் என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 10% மட்டுமே ஒட்டுமொத்த தேவையை பூர்த்திசெய்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றனர். உக்ரைன் ரஷ்யா தவிர இந்தியாவிற்கு சப்ளை செய்யும் மற்றோரு நாடு அர்ஜெண்டீனா. ஆனால் ஒட்டுமொத்த தேவையை அந்த நாட்டால் பூர்த்தி செய்ய முடியாது என கூறுகின்றனர்.

இதனால் உக்ரைன் ரஷ்யாவில் இருந்து போர்தொடுத்தால் சமையல் எண்ணெய்க்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்ப்படும் எற்ப்பட்டு  விலை கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள் பொருளாதர நிபுணர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top