Connect with us

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருடன் நட்பு நீடிக்கும் – அண்ணாமலை திட்டவட்டம்!!

202108120843172026 Tamil News Tamil News Annamalai says PM Modi sown hope in minds farmers SECVPF

தமிழகம்

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருடன் நட்பு நீடிக்கும் – அண்ணாமலை திட்டவட்டம்!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து மோதல்கள் நிலவி வருகிறது.

அந்த வகையில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  ஓபிஎஸ், இபிஎஸ்  இடையே  கடும் மோதல்கள் நிலவி இரண்டாக பிரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாஜகவானது ஓபிஎஸ், ஈபிஎஸ் பக்கமாக என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது நட்பானது ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவர் பக்கமும் இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அதிமுக விவகாரத்தில் பாஜக வெறுப்பு காட்டாது என கூறியுள்ளார். அதே போல் ஓபிஎஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அவரிடம் நலம் விசாரித்ததாக கூறினார்.

மேலும், இன்று காலை அவருடைய மகனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top