தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளத்

இதனிடையே இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வருகின்ற 23,24-ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

மேலும், லட்சத்தீவு பகுதிகள் கேரள கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று கூறியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment