இந்தியாவின் மிகவும் பேமஸ் ஆன தொலைக்காட்சி நிகழ்ச்சி எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது பிக்பாஸ் மட்டும்தான். பிக் பாஸ் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக தமிழக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உலகநாயகன் கமலஹாசன் திகழ்கிறார்.
இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. தற்போது 6 பேர் பிக்பாஸ் இறுதி மேடைக்காக காத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் ராஜு, பிரியங்கா, தாமரை, பாவணி, நிறுப் மற்றும் அமீர் ஆகிய 6 பேர். இவர்களில் யாரேனும் ஒருவரால் மட்டும்தான் பிக் பாஸ் டைட்டில் அடிப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கான பரிசுத் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நிலையில் அடுத்தடுத்து பரிசு பெற்ற பிக்பாஸ் வீட்டிற்குள் காணப்படுகிறது. ஒரு முறை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பணப்பெட்டியை பற்றிப் பேசினார். யாராவது ஒருவர் இந்த பண பெட்டியை எடுப்பார்கள் என்று காத்துக்கொண்டு நிலையில் சிபி முன்வந்துள்ளார்.
அதன்படி சிபி தான் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு கிளம்புவதாக மீதமுள்ள ஹவுஸ் மெட்டுகளிடம் கூறினார். அவர் பரிசுப்பெட்டி எடுக்கும்போது 12 லட்ச ரூபாய் உள்ளதாக காணப்படுகிறது. சக ஹவுஸ் மேட் பிரியங்கா மற்றும் பலர் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தால் மதிப்பு தொகை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் சிபி தான் பணத்திற்காக அல்ல; முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் பணப்பெட்டியை எடுக்கிறாரா? இல்லையா? என்பது இன்றைய நிகழ்ச்சியின் போது தெரியும்.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/PbEOGEZZ5bU” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>