காலி மது பாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் ;; தமிழக அரசு அறிவிப்பு !!
நீலகிரி மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் காலி மது பாட்டிலை திருப்பி கொடுத்தால் ரூ.10 பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
வன பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்பு ஏற்படுவதுடன் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் மலை மாவட்டமாக உள்ள நீலகிரியில் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொடு மது பாட்டில்களுக்கும் அடையாளமாக சீல் வைக்கப்படுகிறது.
அதோடு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காலி மது பாட்டிலை திருப்பி கொடுத்து விட்டு ரூ.10 பெற்றுக்கொள்ளுமாறு கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். எனவே ஓரிரு நாட்களில் இந்த புதிய அறிவிப்பு அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
