ரஷ்யாவில் அஜித்-விஜய் சந்திப்பு நடக்குமா?

a9b097721760ff967ad6bea261150512

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பும் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதை அடுத்து இருவரும் ரஷ்யாவில் சந்திப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அடுத்த மாதம் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது 

அதேபோல் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் வரும் செப்டம்பரில் பீஸ்ட் படக்குழுவும் ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது 

எனவே ரஷ்யாவில் ஒரே நேரத்தில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதை அடுத்து ரசிகர்கள் அஜித், விஜய் ஆகிய இருவரும் ரஷ்யாவில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சந்திப்பு நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.