ஊட்டியில் காட்டாற்று வெள்ளம்: 3 பெண்கள் உடல் மீட்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம் நீர்நிலை பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த ஆனிக்கல் ஆற்றில் கனமழையின் காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுயுள்ளது. அதே சமயம் அந்த பகுதியில் இருந்த மாரியம்மன் கோவிலில் கார்த்தியை தீப திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று முடிந்தது.

மோடியை கொல்லுங்கள்! காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் கைது!!

இந்நிலையில் திருவிழா முடிந்தவுடன் பெண்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காற்றாற்று வெள்ளம் ஏற்படவே 4 பெண்களை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பெண்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய 4 பெண்களின் 3 பேரை சடலமாக மீட்டனர்.

உஷார்! 15 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

அதோடு மாயமான மேலும் ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. தீப திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பும் போது 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.