Connect with us

நயன்தாரா காதலை வெளியிட்ட விக்கிபீடியா பதிவு – கடுப்பான ரசிகர்கள்!

nayanthara 14 1

பொழுதுபோக்கு

நயன்தாரா காதலை வெளியிட்ட விக்கிபீடியா பதிவு – கடுப்பான ரசிகர்கள்!

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது

இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.திருமணம் முடிந்து வருகிற 11-ஆம் தேதி இருவரும் இணைந்து அனைவரையும் சந்திக்கிறோம் என செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

nayan 1

நயன் விக்கி திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன செட் அமைக்கப்பட்டது .மேலும் திருமணத்தை மும்பை சார்ந்த இவண்ட் மேனேஜ்மேண்ட் அமைப்பிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் பெற்றிருந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ரஜினி, சூர்யா, கார்த்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான்,அஜித் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் 300 பேர் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

na ma 2

இந்நிலையில், விக்கிபீடியா பக்கத்தில் நயன்தாராவின் கணவர் என்கிற இடத்தில் சிலம்பரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிம்புவும், நயன்தாராவும் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து தற்போது வரை நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

na ma2

வில்லனாக பிரேம்ஜி! யாரு படத்தில,எந்த ஹீரோவுக்கு தெரியுமா?

தற்போது இந்த விக்கிபீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியமடைந்தனர், ஏன்… இப்படி… நயன்தாராவின் திருமணம் நடந்த இருக்கும் இந்த சமயத்தில் யாரோ இப்படி ஒரு காரியம் செய்து மிகவும் தவறு என ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்து கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top