மனைவியின் கண் முன்னே… பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடியை வெட்டு கொலைசெய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோ. இவர் மீது கொலை மற்றும் வழிபறி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும் தாஸ், திருநாவுகரசு உள்ளிட்டோருக்கும் கடந்த 4 வருடமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

குடிபோதையில் அநாகரீகம்: பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது!!

இந்நிலையில் நேற்றிரவு திருநாவுகரசு கோஷ்டிகள் ஆகாஷ் என்பவரை தாக்கி உள்ளதாக கூறப்படுகின்றனர். இதனை தட்டிக்கேட்ட மனோவை ஓடி ஓடி விரட்டி உள்ளனர். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாறியாக வெட்டிள்ளனர்.

அப்போது ரத்த வெள்ளத்தில் சரிந்த மனோ மனைவி கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மேலும், தப்பியோடிய கொலையாளிகளில் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகரை பொறுத்தவரையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.