உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவி: ஆத்திரத்தில் நடந்த விபரீதம்..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோம்பிவிலியை சேர்ந்தவர் சுப்ரியா ஷிண்டே. இவர் கடந்த கடந்த 15 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேசப் பரிசோதனைக்காக மருத்திவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சுப்ரியாவின் வீட்டின் வெளியே சுப்ரியாவின் கணவரின் நண்பரான விஷால் தாவார் காலணி இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதில் விஷால் தாவாரை பிடித்து போலீசார் முதற்கட்ட விசாரணை தொடங்கினர். இதில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்தபோது சுப்ரியாவிடம் விஷால் தாவார் உல்லாசமாக வாழ்கைக்கு அழைத்துள்ளார்.
ஆனால் சுப்ரியாவோ மறுப்பு தெரிவித்து வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷால் தாவார் அங்கிருந்த கயிற்றால் சுப்ரியாவின் கழுத்தை இறுக்கி கொலைசெய்து விட்டு ஷோபாவிற்கு பின்னால் மறைத்து வைத்தது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்து வருகின்றன.
