Connect with us

காதலர் தினத்தில் கள்ளக்காதல்: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர்

News

காதலர் தினத்தில் கள்ளக்காதல்: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர்


4cc72deb36440a0454e131a88cd7047e

காதலர் தினத்தன்று கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை அவரது கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிய தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேலம் மாவட்டத்தில் பிரகாஷ்-ப்ரியா என்ற தம்பதியருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவுக்கும் அவரது வீட்டிற்கு தினமும் பால் ஊற்ற வந்த சின்னத்துரை என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த கணவர், சின்னத்துரை இனிமேல் பால் ஊற்ற வேண்டாம் என்று விரட்டி அடித்து விட்டார்

இருப்பினும் அவ்வப்போது பிரியா, சின்னத்துரை வீட்டிற்குச் சென்று கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றைய காதலர் தினத்தில் சின்னத்துரையை பிரியா பார்க்க சென்றதை அறிந்த பிரகாஷ் ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து சின்னதுரை வீட்டிற்குச் சென்று பிரியா மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அதன்பின் போலீசில் சரணடைந்துள்ளார். வெட்டுப்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top