காதலர் தின கிப்ட்டாக கணவருக்கு கல்லீரல் கொடுத்த மனைவி.!

காதலர் தின நாளில் மனைவி ஒருவர் தன் கணவனுக்கு கல்லீரலைத் தானமாகக் கொடுத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியினைச் சார்ந்தவர் சுபீஷ். இவரது மனைவியின் பெயர் பிரவிஜா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுபீஷ்க்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட எர்ணாகுளத்தில் உள்ல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையின்போது டாக்டர்கள் சுபீஷ் உடலில் கல்லீரலில் பாதிப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

அதன்பின்னர் தனியார் மருத்துவமனையில் செலவு செய்ய முடியாத நிலையில் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுபீசை அட்மிட் செய்துள்ளனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரவிஜா தன் கல்லீரலைக் கொடுக்க முன்வர, பரிசோதனை செய்து டாக்டர்கள் பிரவிஜாவின் கல்லீரலைப் பொருத்தியுள்ளனர்.

இந்த ஆபரேஷனை பிரவிஜாவின் வேண்டுகோளின்படி காதலர் தின நாளில் டாக்டர்கள் செய்து வெற்றி கண்டுள்ளனர். 18 மணி நேரம் ஆபரேஷனுக்குப் பின் சுபீஷ் மற்றும் பிரவிஜா இருவரும் உடல்நலத்துடன் உள்ளனர்.

மேலும் குழந்தைகள் பிரவிஜாவின் பெற்றோர் கண்காணிப்பில் கடந்த 5 நாட்களாக இருந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.