கள்ளக்காதல் விவகாரம்: கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, மகள்..!!!

தூத்துக்குடியில் கள்ளக்காதலால் கணவனை எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே தகாத உறவால் ஏற்படும் விபரீதங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி அடுத்த அச்சங்குளம் பகுதியில் சில தினங்களுக்கு முன் பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெரும் சோகம்! சத்தீஸ்கரில் துணை சபாநாயகர் திடீர் மரணம்..!!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் ஆண் சடலம் ஞானசேகர் என தெரியவந்தது.

இதனையடுத்து அவரது மனைவி மற்றும் மகள்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் படி, மனைவி சலைத் ராணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏ.க்கள் உடன் இ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை!!

அதே சமயம் கார்த்திக் சலைத் ராணியின் மூத்த மகளை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஞானசேகர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சலைத் ராணி மற்றும் மகள்கள் ஞானசேகரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment