நேற்று கொடுக்கப்பட்ட புயல் சின்னம்; இன்று தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை!
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. நேற்றைய தினம் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் சின்ன எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி எண்ணூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் முதலாம் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி புயல் சின்னம் எச்சரிக்கை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
திருவாரூர், விளமல், மடப்புரம், தேவர்கண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, மங்கைநல்லூர், குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து கொண்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
